Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தனுஷ்?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். அதில் ஒரு சில நாயகிகளே தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் 'ரஜினி முருகன்', 'இது என்ன மாயம்' படங்களின் நாயகி கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீபகாலங்களாக ‘மைனா’, ‘கும்கி’ ,’ கயல்’ என அறிமுக நடிகர்களை வைத்தே படமெடுத்து வந்த பிரபு சாலமன் தற்போது தனுஷுடன் கை கோர்த்துள்ளார். இந்த படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிந்து லோகேஷன் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம். 

இது மட்டுமின்றி ஆதாம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்து வரும் ’பாம்பு சட்டை’ படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார். இது தவிர்த்து ’ஐனா இஷ்டம் நுவு’, ’ஹரிகதா’ என்னும் இரு தெலுங்கு படங்களிலும், தர்போனி என்னும் மலையாள படத்திலும் கீர்த்தி பிசி. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close