Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் 'வெத்தல போட்ட சோக்குல நான்' பாடல்?

கார்த்திக் நடிப்பில் 1992ஆம் ஆண்டில் இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் பானுப்ரியா , ராதா ரவி, பிரதாப் போத்தன் நடிப்பில் வெளியான படம் ‘அமரன் 2’. படத்திற்கு இசை ஆதித்யன். இப்படத்தின் மூலம் தான் கார்த்திக் பாடகராகவும் அறிமுகமானார்.படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமாக அமரன் 2 படம் உருவாக உள்ளது. கார்த்திக்கே ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தின் புகைப்படங்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் நானும் பல தீய பழக்கங்களுக்கு ஆளாகியிருந்தேன், தற்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதால் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். மேலும் நம்மை போன்ற கற்பனையாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கு எப்போதும் வயதாகாது. 

ஏனெனில் காலத்திற்கேற்ப சிந்திக்க தெரிந்தவர்கள் நாம் எனக் கூறிய கார்த்திக்கிடம் முதல் பாகத்தில் நீங்கள் பாடிய ’வெத்தல போட்ட சோக்குல நான்’ பாடல் ஹிட்டானது. இந்த அமரன் 2 படத்திலும் நீங்கள் பாடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்போது நான் பாடவில்லை எனில் இவர் என்னை விட மாட்டார் என கார்த்திக் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். எங்களது நட்பு மீண்டும் எங்களை ஒன்று சேர்த்துள்ளது என இயக்குநர் கே.ராஜேஷ்வர் குறித்தும் கார்த்திக் பேசியுள்ளார். இதன் மூலம் இந்த படத்திலும் கார்த்திக் ஒரு பாடல் பாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்