Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படத்தின் படப்பிடிப்பு இடம்மாறியது.

விஜய் இப்போது சிம்புதேவன் இயக்கும் புலி படத்தின் வேலைகளை முடித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அடுத்து அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவிருக்கிறது.

முதலில் படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பை சீனாவில் நடத்துவதாகத் திட்டமிட்டிருந்தார்களாம். அதற்காக சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாகச் சீனா போய் படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடங்களைத் தேர்வு செய்துவிட்டு வந்திருக்கிறார் அட்லி என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜூலையில் தொடங்கும் படப்பிடிப்பு சென்னையில்தான் நடக்கவிருக்கிறதாம். இதற்காக சென்னை பின்னிமில் மற்றும் கிழக்குக்கடற்கரைச்சாலையிலுள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவிலும் இந்தப்படத்துக்காக அரங்குகள் அமைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.

இரண்டுநாட்களுக்கு முன்பாக செட் ஒர்க் செய்வதற்காகச் சிறியஅளவில் பூஜைபோட்டு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்களாம். இங்கு முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின் சீனா போகத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close