Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசிர்கர்களிடம் வெங்கட் பிரபு வேண்டுகோள்!

 வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பார்த்திபன், பிரேம்ஜி அமரன் நடிப்பில் வெளியான படம் ‘மாசு’. கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இந்த படத்தில் அஜித், விஜய் படங்களின் பின்னணி இசை மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இதில் ’நான் கடவுள்’ ராஜேந்திரன் , பிரேம் ஜி உள்ளிட்டோருக்கு அஜித்தின் படங்கள் சம்மந்தப்பட்ட பெயர்களும், பின்னணி இசைகளும் , சூர்யாவிற்கு விஜய் படங்களின்  பின்னணி இசை , மற்றும் கதாபாத்திர பெயர்கள் பயன்படுத்தவே இணையத்தில் இது பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. 

அஜித், விஜய் ரசிகர்கள் கமெண்டுகள், மீம்ஸ்கள் என தங்களது சண்டையை போட்டு வர ,வெங்கட் பிரபு ட்விட்டரில் இதற்கு பதில் கூறியுள்ளார். ”கைஸ் ! தயவு செய்து இந்த வெறுப்பை நிறுத்தவும், எப்பாடியாயினும் கடைசியில் நாங்கள் எல்லாரும் ஒரே குடும்பம் தான். பொழுதுபோக்குவோர். அதனால் இந்த வெறுப்பான போக்கை விடுத்து படத்தை ரசிக்கவும்” என கேட்டுகொண்டுள்ளார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்