Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதி- சந்தானம் மோதல் முடிவுக்கு வரவில்லையா?

உதயநிதிக்கும் சந்தானத்துக்கும் நண்பேன்டா படம் தயாரான நேரத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் இனிமேல் உதயநிதி படங்களில் சந்தானம் இருக்கமாட்டார் என்றும் சொல்லப்பட்டது. இருவருமே அதைப் பல்வேறு சமயங்களில் மறுத்துவிட்டார்கள் என்றாலும் அந்தச்செய்தி உயிரோடு இருந்துகொண்டேயிருக்கிறது. இப்போது நடந்திருக்கும் நிகழ்வின் மூலம் அது மேலும் உறுதிப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் இனிமேஇப்படித்தான் படம் ஜூன் 12 அன்று வெளிவரவிருக்கிறது. இந்தப்படத்தை சந்தானம் தன்னுடைய நிறுவனத்தின் மூலமே தயாரித்திருக்கிறார். ஆனால் படத்தை உதயநிதிஸ்டாலின்தான் வெளியிடுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, படத்தை வெளியிடுவது தொடர்பான கேள்விக்கு, கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று சொல்லியிருந்தார் சந்தானம்.

படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடப்போகிறது என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்று அப்போது சொல்லப்பட்டது. உதயநிதி படங்கள் என்றாலே தமிழகஅரசு வரிவிலக்குக் கொடுப்பதில்லை என்பதால் அந்நிறுவனத்தின் பெயரைப் போடாமல் வரிவிலக்கு வாங்கிவிட்டு அதற்குப்பின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் பெயரைப் போட்டுப் படத்தை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் படம் வெளியாக இன்னும் மூன்றுநாட்களே உள்ள நிலையிலும் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் பெயர் அந்தப்படத்தில் இடம்பெறவில்லை. இதனால் நண்பேன்டா சமயத்தில் உதயநிதிக்கும் சந்தானதுக்கும் ஏற்பட்ட சிக்கல் இன்னும் சரியாகவில்லை என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இனிமேஇப்படித்தான் படக்குழுவினர் வேறுமாதிரி சொல்கிறார்கள், விளம்பரங்களில் பெயர் இல்லையே தவிர, ரெட்ஜெயண்ட் நிறுவனத்தினர்தான் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.  படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனமே வெளியிடவிருப்பதாக உதயநிதியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close