Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது ஃபேஸ்புக் சினிமா!

‘‘சித்ரான்னு ஒரு தோழி. பெங்களூருல இருக்காங்க. அவங்க என்னிடம் சாட் பண்ணும்போது ஆடியோ மெசேஜ்தான் அனுப்புவாங்க. பல மாசமா நண்பர்களா இருந்தும் ஒரு தடவைகூட அவங்க டைப் பண்ணி அனுப்பியது கிடையாது.

அவங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் ‘ஜிகினா’ கதை எனக்குத் தோணுச்சு. இதை அவங்ககிட்டேயும் சொல்லியிருக்கேன். அவங்களும் பாராட்டியிருக்காங்க.

அதுக்கும் கதை உருவானதுக்கும் என்ன தொடர்புனு யோசிக்கிறீங்களா, அவங்களை நான் நேர்ல சந்திச்சதே இல்லை” என்கிறார் நந்தா பெரியசாமி. ஃபேஸ்புக், ஃபேக் ஐடி ஆகியவற்றைக் கதைக்களமாகக்கொண்டு ‘ஜிகினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ‘‘ ‘மின்னுவதெல்லாம் பெண்ணல்ல’னு ஒரு கேப்ஷன் ரெடி பண்ணியிருக்கேன். இதுதான் படத்தோட ஒன்லைன். பளபளப்பு காட்டியே பக்கத்துல இழுத்திடும் ஜிகினா.

அது மாதிரிதான் ஃபேஸ்புக். இந்த ஜிகினாவுக்கு மயங்குற முக்கால்வாசிப் பேர் அதைத் தப்பான விஷயங்களுக்குதான் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஃபேஸ்புக்னாலே ‘உண்மையை மறைக்கிறதுதான்’னு ஆக்கிவெச்சிருக்காங்க. ஒரு விஷயத்துக்காக தன்னுடைய உண்மையான முகத்தை மறைச்சு தன் அடையாளத்தை மாத்திக்கிற ஹீரோவா விஜய் வசந்த்.

இதனால வர்ற பிரச்னைகள்ல இருந்து எப்படி மீண்டு வர்றான்கிறதை சுவாரஸ்யமா சொல்லியிருக்கோம். விஜய் வசந்த்துக்கு கால் டாக்ஸி டிரைவர் கேரக்டர். ஐ.டி இளைஞர்களின் இரவு வாழ்க்கைக்கும் படத்துல முக்கியமான இடம் இருக்கு’’ என்றவரிடம் ‘‘உங்க படங்கள்ல வித்தியாசமா முயற்சி பண்றீங்க. ஆனா நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு படங்கள் ஓடுவது இல்லையே?’’ என்றேன்.‘‘இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கிடும்.

முழுப் படத்தையும் உட்கார்ந்து பார்த்துதான் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிடுது. படம் பார்த்த லிங்குசாமி, கிளைமாக்ஸ்ல எழுந்திரிச்சு நின்னு கை தட்டினார். ‘‘சூப்பர்டா மச்சான். பின்னிட்ட! இயக்குநராவும் நீ ஜெயிச்சுட்டே’னு லிங்குசாமி சொன்னப்போ, எனக்கு வார்த்தை வரலை. என்னுடைய படைப்பு இன்னைக்கு முழுமையா, நல்லா இருந்ததால்தான் லிங்குசாமியின் இந்தப் பாராட்டும், பட வெளியீடும்!” என்று நெகிழ்கிறார்.

- கே.ஜி.மணிகண்டன் படம் : ஆ.முத்துக்குமார்-

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close