Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிக்கெதிரான போராட்டம் ஒத்திவைப்பு?

லிங்கா படச்சிக்கல் தொடர்பாக ஜூன்13 ஆம் தேதி ரஜினி வீட்டுமுன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையே இந்தச் சிக்கல் தொடர்பாகப் பேச முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க ரஜினி நேரம் கேட்டார் என்றும் அதற்கு முதல்வர் தரப்பிலிருந்து எந்தப்பதிலும் இல்லையென்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட லிங்கா விநியோகதர்கள் தரப்பிலும் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்களாம். அவர்களுக்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப்பதிலும் வரவில்லையென்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே 13 அம் தேதி நடத்துவதாகச் சொல்லப்பட்ட போராட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் செய்திகள் உலவுகின்றன. முதல்வரைச் சந்திக்க நேரமும் கேட்டுவிட்டு போராட்டத்தையும் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் போராட்டம் நடத்துவதைத் தற்காலிகமாகக் கைவிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரப்பில் கேட்டபோது, தமிழகமுதல்வர் எற்கெனவே வெளியிட்ட அரசாணையின்படி எங்களுக்குத் தீர்வு வேண்டும் என்று கேட்டிருக்கிற நேரத்தில், போராட்டமும் நடத்துவது அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் போராட்டத்தை ஒத்திவைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

முதல்வரைச் சந்திக்க அனுமதி கிடைத்துவிட்டால் போராட்டத்துக்கான தேவையே இருக்காது என்பது மட்டுமின்றி முதல்வர் இருக்கும் பகுதியிலேயே ரஜினி வீடும் இருப்பதால் அங்கு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி நிச்சயம் கிடைக்காது என்பதாலும் போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்