Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரம்பிரபுவுக்குப் பதிலாக கிருஷ்ணா நடிக்கும் படம்.

பெரோஸ் என்கிற புதுஇயக்குநரின் இயக்கத்தில் கழுகு, யாமிருக்கபயமே நாயகன் கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படம் பண்டிகை. இந்தப்படத்தில் கயல்ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு  கருணாஸ், நிதின்சத்யா உட்பட பலர் நடிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது  இயக்குநர்அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி. இவர் விரைவில் இந்தப்படத்தின் இயக்குநர் பெரோஸைத் திருமணம் செய்யவிருக்கிறார். இந்தப்படத்தில் கிருஷ்ணாவுக்கு முரடர் வேடமாம்.

இயக்குநர் பெரோஸ் முதலில் இந்தக்கதையை நடிகர் விக்ரம்பிரபுவுக்குத்தான் சொல்லியிருந்தாராம். கதை அவருக்குப் பிடித்திருந்ததால் அவர்தான் நடிக்கப்போகிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்காகப் புதியஅலுவகம் ஒன்றைத் தொடங்கி வேலை செய்துகொண்டிருந்தார் இயக்குநர் பெரோஸ்.

ஆனால் விக்ரம்பிரபு எற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டு இந்தப்படத்துக்கு வர மிகவும் தாமதமாகும் என்பதால் அந்தப்படம் நடக்காமல் போய்விட்டதென்று சொல்கிறார்கள். அதன்பின் கிருணாவிடம் இந்தக்கதையைச் சொல்லிச் சம்மதம் வாங்கிவிட்டார்களாம். தற்போதைய காதலியும் வருங்காலமனைவியுமான விஜயலட்சுமியின் பெயரிலேயே படத்தைத் தயாரிக்கவும் தொடங்கிவிட்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close