Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருப்பதியில் நடந்தது விதார்த் திருமணம்.

“மைனா” படத்தின் மூலம் கதாநாயகனாக அறியப்பட்டவர் விதார்த், இவருக்கும் காயத்திரிக்கும் இன்று திருப்பதியில் திருமணம் முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு நடிகர் ராதா ரவி நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மின்னலே படத்தின் மூலம் துணைநடிகராக அறிமுகமாகி மைனா, ஜன்னல் ஓரம், வீரம், காடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பரின் மகள் காயத்திரி தேவிக்கும் திருமண நிச்சயம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்துடன் திருப்பதியில் திருமணம் சிறப்பாக இன்று காலை நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையில் ஜூன் 17ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவிக்கவுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close