Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.

 விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவிட்டு திரையரங்குகளிலும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதோடு பல எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்களும் அந்தப்படத்தை வரவேற்கிறார்கள். இயக்குநர் வசந்தபாலன் ஒருபடி மேலே போய், எதார்த்தவகைப் படங்களின் தேவதூதன் என்று வர்ணித்துள்ளார். காக்காமுட்டை படம் பற்றிய அவருடைய முகநூல் பதிவு.....

காக்காமுட்டை படத்தின் வியாபார வெற்றி அளவில்லாத உற்சாகத்தை அளிக்கிறது.
தொடர்ந்து தமிழ் சினிமாவின் நிலை 
வேறுவிதமாகவும் 
பயமுறுத்தும் வகையிலும் 
பிடிபடாத வகையிலும் இருந்தது.
திகில் படங்கள் 
பயமுறுத்தும் பேய் படங்கள் 
பயமுறுத்தி சிரிப்பூட்டும் பேய் படங்கள் 
வெறும் சிரிப்பு படங்கள் 
திரில்லர் படங்கள் 
திடுக்கிடும் திருப்பங்களும் 
கொண்டைஊசி வளைவுகளும் நிரம்பிய சண்டை படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த நிலையில் 
பார்வையாளர்கள் மொத்தபேருமே 
இதற்கு மாறிவிட்டார்களோ என்று தோன்றியது.
இளம் பார்வையாளர்கள் 
மொத்தபேரும் 
இந்த மனநிலையில் தான் திரைப்படங்களை ரசிக்கிறார்களோ 
என்ற ஐயம் உண்டாகியது.
இது ஐபோன் யுகம் 
ஐபேடு யுகம் 
பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் யுகம் 
ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று நிலவிய பேச்சை பொய்யாக்கியது காக்காமுட்டையின் வெற்றி.
யதார்த்த வகை படங்களுக்கான 
காலம் முடிந்து விட்டதோ என்று எண்ணுகிற நிலையில் காக்காமுட்டை திரைப்படம் ஒரு தேவதூதன் 
என் போன்ற யதார்த்த வகை இயக்குனர்களுக்கு....

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close