Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட சண்டைய விடுங்கப்பா....ட்விட்டரில் புது ட்ரெண்ட் - என்ன சொல்கிறார் சீனு ராமசாமி!

#fanof1respectal என்ற டேகிட்ட வார்த்தை தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. சல்மான்கான் தனது ரசிர்களுக்கு ட்விட்டர், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டையை நிறுத்துங்கள் என கேட்க அது இப்போது இன்னும் சூடாக வேறு விதமாக பரவத் துவங்கியுள்ளது. நாம் சினிமா விகடனில் நேற்று கேட்ட அதே கேள்வியான சல்மான் கானால் முடியுமெனில் ஏன் அஜித் , விஜய் செய்யக்கூடாது என்ற கேள்வியை தற்போது இணையம் முழுக்க கேள்விகளாக மாறியுள்ளன.

நடிகர் சூர்யா ’ரசிகர்கள் நலம் விரும்பிகள் வேறு நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டையிட வேண்டாம். உங்கள் குடும்பம், உங்களுக்காக என அதிக நேரங்களை செலவிடவும். அவர்கள் பெருமை படும்படி நடக்கவும் என் ட்வீட் செய்துள்ளார்.

 இதுகுறித்து பல சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அதில் ஒருவர் இயக்குநர் சீனுராமசாமி.அவர் ஒரு புது ஐடியாவே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

’கூடல் நகர்’, தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர்பறவை’, வரவிருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அடித்தட்டு வர்க்கம் குறித்த படங்களை எடுக்கும் இயக்குநரான சீனு ராமசாமி, சமூக வலைதளங்களான ட்விட்டர், முகநூல் என எப்போதும் ஸ்டேட்டஸ்களில் பிசியாகவும் இருக்கும் பழக்கம் உடையவர்.

 இந்நிலையில் சீனு ராமசாமி ரசிகர்கள் இணைய வழி சண்டை நிறுத்த ஒரு வழி உண்டு நடிகர்கள் வசனம் என்ற பெயரில் மற்ற நடிகர்களிடன் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அதுவும் உண்மைதான் ஹீரோக்கள், நான் இந்த சீனில் இவரை தாக்கவில்லை, அவரைத் தாக்கவில்லை எனக் கூறினாலும் ஏன் அந்த கேள்விக்கான நிலையை உண்டாக்க வேண்டும் என்பது இப்போது அடுத்த கேள்வியாக உள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close