Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயனுக்குப் பிறகு தனுஷ்!

 தனுஷ் இப்போது வேலையில்லாப்பட்டதாரியின் இரண்டாம்பாகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வெற்றிமாறன் படம், பிரபுசாலமன் படம் ஆகியனவற்றில் வரிசையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதற்கடுத்து ஒருபடத்தில் நடிக்கவும் இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அவருடைய  தயாரிப்பில், சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கத்தில்தான் தனுஷ் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. காக்கிச்சட்டை பட நேரத்திலேயே அடுத்தபடமாக எடுக்கிற மாதிரி ஒரு கதை சொன்னாராம்.

அந்தக்கதை தனுஷூக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் நானே நடிக்கிறேன் என்று தனுஷ் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. கடந்தஆண்டே இதுபற்றிப் பேச்சுகள் வந்தன. ஆனால் தனுஷோ துரைசெந்தில்குமாரோ இதுவரை அதுபற்றி எதுவும் பேசவில்லை. ஆனால், இப்போது அந்தக்கதையை முழுமையாக்கும் வேலைகளில் இருக்கிறாராம் துரைசெந்தில்குமார்.

தனுஷ் இப்போது இருக்கும் படங்களை முடிப்பதற்குள் துரைசெந்தில்குமார் தன்னுடைய கதைக்குத் திரைக்கதை மற்றும் வசனங்களை முழுமையாக எழுதிமுடித்துவிடுவாராம். அந்தப்படத்தைத் தயாரிக்கப்போவது யார்? என்றால், யார் தயாரிக்க முன்வந்தாலும் முதல்பிரதி அடிப்படையில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே தயாரித்துக்கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள். 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close