Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் படத்திற்கு ஜேம்ஸ்பாண்ட் பட சண்டை பயிற்சியாளர்!

தனுஷ் - சாலமன் கூட்டணியில் உருவாகவிருக்கும் அடுத்தப்படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார் இயக்குநர். முதல் கட்டமாக சண்டைப்பயிற்சிக்காக ஹாலிவுட் படங்களில் வேலைப்பார்த்த ரோஜர் யுவன் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். இவர் பிரபல ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்கைஃபால் மற்றும் ப்ளேடு உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்தவர். 

இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ரயில் பயணத்தில் நடக்கும் காதல் கதையாக உருவாகவிருக்கிறதாம் திரைக்கதை. ரயிலில் ஆபத்தான சண்டைக்காட்சிகள் எல்லாம் படமாக்கவிருக்கிறார்களாம்.

தற்பொழுது தனுஷ் நடிப்பில் விஐபி 2 படப்பிடிப்பு பிஸியாக நடைபெற்றுவருகிறது. வேல்ராஜ் இயக்கத்தில் சமந்தா, எமிஜாக்ஸன் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப்படத்தை முடித்துவிட்டு பிரபுசாலமன் இயக்கவிருக்கும் படத்தில் நடிப்பார் தனுஷ் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close