Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!

ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண்டனக்கா பாடல் தெறி ஹிட் அடித்தது. கடைசியாக வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வரவிருக்கிறது.

ரோமியோ ஜூலியட் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில்  “ ஹன்சிகா படத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நிச்சயமாக ஹன்சிகாவிற்கு விருது கிடைக்கும் என்று ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளினார் ஜெயம்ரவி. தொடர்ந்து ஹன்சிகா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வேறு மொழிப்படங்களில் நடிக்கிறீர்களா?


தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் மட்டும் தான் நடித்துவருகிறேன். அதிலும் தமிழில் தான் நடிக்கிறேன். தெலுங்கில் ஒரு படத்திற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முடிவானதும் தெரிவிக்கிறேன்.

மாடல், ஹோம்லி இரண்டில் எப்படி நடிக்க பிடிக்கும்?

பாவாடை தாவணியில் நடிக்கத்தான் ரொம்ப பிடிக்கும். கிராமத்து கதைகளில் நடிக்கவேண்டும் என்றால் உடனே ஓகே சொல்லிடுவேன்.

திடீர்னு உடலை குறைத்துவிடுகிறீர்கள். அதற்கென்று தனியாக ஏதும் பயிற்சி எடுக்கிறீர்களா?

உடல் எடை கூடுவதையும், குறைவதையும் பற்றி கவலைப்படுவதே இல்லை. சாதாரண உணவுமுறைகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். தனியாக பயிற்சியெல்லாம் கிடையாது. உடல் எடை கூடினாலும் எனக்கு கவலையில்லை என்று கூறி முடித்தார் ஹன்சிகா.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close