Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர் கேரக்டரில் இவரா?..... ஏ.ஆர்.முருகதாஸின் அகிரா அப்டேட்!

தமிழில் வெளியான மௌனகுரு படத்தை இந்தியில் அகிரா என்ற பெயரில் அருள் நிதி நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் கதைப்படி ஹீரோ அருள் நிதி ஒரு கட்டத்தில் பைத்தியம் என மாற்ற முயற்சிகள் நடக்கும் அதில் சோனாக்‌ஷி சின்ஹா எப்படி பாஸ் என்ற கேள்விக்கு  படம் வந்தால் தான் தெரியும் என்ற பதிலே கிடைக்கிறது.

ஆனால், மௌனகுருவில் ஜான் விஜய் நடித்த அசிஸ்டெண்ட் கமிஷனர் மாரிமுத்து ரோல் மிகப் பிரபலம். இந்த ரோலில் இந்தியில் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். ஏற்கனவே துண்டு துக்கடானு தலை காட்டி இருந்தாலும் முழுப்படம்னா..? பாம்பே வெல்வெட்டை உதறிட்டு அழுக்குக் காக்கியைப் போட்டுக்கிட்டு அடுத்து அடுத்துனு போய்க்கிட்டே இருக்கிறதுதான் அந்த ஆளோட சக்சஸ். 

இப்ப அந்த மேஜிக் அகிரா படத்திலயும் நடக்க போகுது. அப்புறம் 'அகிரா'வுக்கு டயலாக்ஸ் அனுராக்தான்! கெட்ட டைரக்டர் கெட்ட கெட்‍டப்ல எப்படி இருப்பாரோ? அதையும் பார்த்திடுவோம்!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close