Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்யாவிடம் பிடித்ததே இதுதான்....சந்தானம்!

’ வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன், சேட்டை மற்றும் ராஜா ராணி, படங்களை அடுத்து மீண்டும் நண்பர்களாக நடித்துவருகிறார்கள் ஆர்யாவும், சந்தானமும். இருவரும் படங்கள் தவிர்த்து நிஜ வாழ்விலும் நல்ல நண்பர்கள் என்பது நாமறிந்ததே. 

இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா அதீத ஆர்வம் காட்டி வரும் சைக்கிள் பயணத்தின் மூலம் போதிய பயிற்சிகளுக்கு பிறகு புதுச்சேரி வரை சைக்கிளில் பயணம் செய்துள்ளார். மேலும் சைக்கிள் பயணம் உடலுக்கு எவ்வளவு நன்மை, ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார். 

இதை சந்தானம், ”எனக்கு ஆர்யாவிடம் பிடித்ததே இந்த ஃபிட்னஸ் தான். அவரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயமும் இதுவே. இதை தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளையும் பின்பற்ற செய்வது இன்னும் சிறப்பு. அவர் புதுச்சேரி வரை சைக்கிளில் சென்றது ஆச்சர்யமாக இருக்கிறது” எனவும் கூறியுள்ளார் சந்தானம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close