Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் குழப்பமா?

விக்ரம் இப்போது விஜய்மில்டன் இயக்கத்தில் பத்துஎண்றதுக்குள்ள படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சிலநாட்கள் நடக்கவேண்டியிருக்கிறதாம். இதற்கடுத்து அவர் அரிமாநம்பி படஇயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அடுத்து அந்தப்படம்தான் தொடங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

அதற்காக விக்ரம் தாடிவளர்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப்படத்தை முதலில் தயாரிப்பாளர் தாணுவின் சகோதரர் தயாரிப்பதாக இருந்தது. இந்தப்படத்தை ஐங்கரன்நிறுவனத்துக்குச் செய்யலாம் என்று விக்ரம் விரும்பியதால் அந்த நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது.

இந்தக்கதை உருவாக்கம் தொடங்கி எல்லாவிசயங்களிலும் தாணுவின் சகோதரரே ஈடுபட்டிருந்ததால், அவரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டுத்தான் ஐங்கரன்நிறுவனத்துக்கு படம் கைமாறியது என்றார்கள்.அதன்பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இருபதாம்தேதி வாக்கில் தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. அப்படியானால் அதறகான வேலைகளை இப்போதே தொடங்கியிருக்கவேண்டும் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையென்று சொல்கிறார்கள்.

படப்பிடிப்புக்கு முன்பான வேலைகள் நடக்காததால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. பத்துஎண்றதுக்குள்ள படமும் திட்டமிட்டபடி நடக்காமல் இழுக்கிறது, அடுத்துத் தொடங்கவேண்டிய படமும் தாமதமாகிக்கொண்டே போகிறது, நம் விசயத்தில் இவ்வளவு குழப்பங்களா? என்று விக்ரம் வேதனையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close