Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயலட்சுமி தயாரிப்பில் கிருஷ்ணா நடிக்கும் ’பண்டிகை’!

நடிகை விஜயலட்சுமி நடிப்பதை விடுத்து தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் முதல் படமாக பண்டிகை என்ற படத்தை கடந்த வியாழன் அன்று துவக்கியுள்ளார். படத்தின் நாயகனாக கிருஷ்ணாவும், நாயகியாக ஆனந்தியும் நடிக்கிறார்கள்.

படத்தை விஜயலட்சுமியின் டி டைம் டாக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜயலட்சுமியின் வருங்கால கணவரான ஃபெரோஸ் இயக்கி வருகிறார். இன்னும் இரண்டே கட்ட படப்பிடிப்பில் படம் முழுவதுமாக முடிந்துவிடுமாம்.

அதுமட்டுமின்றி முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகிவருகிறது. இப்படம் குறித்து விஜயலட்சுமி கூறுகையில், சட்டத்துக்கு விரோதமாக நடந்துவரும் சண்டை குறித்த படமே ’பண்டிகை’. தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்திற்கு எடிட்டிங் வேலைகளை செய்கிறார். இசை விக்ரம். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன.

இப்படம் முடிந்தபிறகு தனக்கும் ஃபெரோஸுக்கும் திருமணம் எனவும் தனது தந்தைக்கு தான் நடிப்பது பிடிக்காததால் தான் தயாரிப்பில் இறங்கியுள்ளதாகவும் விஜயலட்சுமி முன்பே ஒரு சந்திப்பின் போது கூறியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close