Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயக்குநர் கெளதம்மேனன் ஏமாற்றினாரா? அவர் மீது தயாரிப்பாளர் தொடுத்த வழக்கு விவரம்.

கெளதம் மேனன் இயக்கிய “நீ தானே என் பொன்வசந்தம்” படத் தயாரிப்புக்காக வாங்கிய பணத்தில் சொந்தமாக வீடு வாங்கிவிட்டதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மீது புகார் எழுந்துள்ளது. இதற்கு 4 வாரத்தில் அவர் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான “நீதானே என்பொன்வசந்தம்” படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.எஸ்.இன்போடெக் நிறுவனத்தின் இயக்குநர் எல்ரெட் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கூறியதாவது, “ இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நீதானே என் பொன்வசந்தம்  படத்தை தயாரித்தேன். அதற்காக எங்கள் நிறுவனத்திலிருந்து கெளதமின் போட்டான் கதாஸ் நிறுவனத்திற்கு 13கோடியே 27 லட்சத்தை கொடுத்தது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இளையராஜாவை இசையமைப்பாளராகவும், முழு படத்தையும் இந்தியாவிலேயே எடுத்தும் முடித்துவிட்டார் கெளதம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் படத்தையும் முடிக்கவில்லை.படமும் வெளியாகி தோல்வியடைந்தது.

நாங்கள் கொடுத்த பணத்தில் அடையாறில் வீடு ஒன்றை வாங்கிவிட்டார். பட செலவிற்கு 4 கோடி மட்டுமே செலவு ஆகியிருக்கிறது. மீதமுள்ள 8 கோடிக்கு வட்டியுடன் சேர்த்து 10 கோடியே 67 லட்சத்து 11,225 ரூபாய் கெளதம் எங்களுக்கு தரவேண்டும். இந்நிலையில் அவர் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் “தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்” படத்தை எங்களுக்கான தொகையை தரும்வரை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, “ கெளதம் வாசுதேவ் 4 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வமான பதிலை தரவேண்டும். அதன் பிறகு வழக்கை விரைவில் விசாரித்து முடிக்கும் பட்டியலில் சேர்க்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்