Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குற்றம்கடிதல் மற்றும் அருள்நிதி படம் ஆகியன தள்ளிப்போயின. எதனால்?

தேசியவிருது பெற்ற குற்றம்கடிதல் மற்றும் அருள்நிதி நடித்த நாலுபோலிசும்நல்லாஇருந்தஊரும் ஆகிய இரண்டு படங்களும் ஜூன் 19 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஜேஎஸ்கே நிறுவனம் இவ்விருபடங்களையும் தயாரித்திருந்தது. அந்தநிறுவனம் ஒரேநாளில் இரண்டுபடங்களை வெளியிடுவது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அவ்விரு படங்களுமே சொன்ன தேதியில் வெளியாகாமல் தள்ளிப்போகின்றன.

காக்காமுட்டை படத்துக்குக் கிடைத்த அமோகவரவேற்பு குற்றம்கடிதல் படம் தள்ளிப்போக ஒரு காரணமாக அமைந்துவிட்டதாம். விருதுப்படங்கள் திரையரங்கில் ஓடாது என்பதைப் பொய்யாக்கி காக்காமுட்டை நல்லவசூலைப் பெற்றிருக்கிறது. அதனால் குற்றம்கடிதலும் அதேஅளவு வரவேற்புப் பெறும் என்று நம்பி பாக்ஸ்ஸ்டார் நிறுவனம் அந்தப்படத்தை வாங்கி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறதாம்.

இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலும் அந்நிறுவனம்தான் குற்றம்கடிதல் படத்தை வெளியிடப்போகிறது என்று சொல்கிறார்கள். எனவே வெளியீட்டுத் தேதியையும் அவர்களே முடிவுசெய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. 

அதேபோல அருள்நிதி படத்தை காஸ்மோவில்லேஜ் நிறுவனம் நிறைய ஊர்களில் வெளியிடவிருக்கிறதாம். அவர்கள்தாம் ரோமியோஜூலியட் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் உட்பட மூன்றுபடங்கள் நன்றாக ஒடிக்கொண்டிருப்பதால் அருள்நிதி படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறத் என்று சொன்னதோடு அதனால் படவெளியீட்டைத் தள்ளிவையுங்கள் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படத்தின் வெளியீடும் தள்ளிப்போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.
   
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்