Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராதாரவியை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் போட்டி?

ஜூலை 15ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நடிகர் சங்க கட்டிட விவகாரத்தினால் விஷாலுக்கும் சரத்குமாருக்கும் இடையே பல வாக்கு விவாதங்கள் நடந்துவருகின்றன. சரத்குமார், ராதாரவிக்கு எதிராக விஷாலும், விஷாலுக்கு எதிராக ராதாரவியும் பல புகார்களை அடுக்கிவருகின்றனர்.

இதற்கு நடுவே ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நடைபெற்ற மருத்துவமுகாமைத் தொடங்கிவைக்க வந்த விஷால் செய்தியாளர்களிடம் கூறும் போது, “ நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து நான் போட்டியிடயிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க கட்டிடத்தில் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்ட வேண்டும் என்ற யோசனையை கைவிட்டுவிட்டு நலிவுற்ற கலைஞர்களுக்காக அந்த இடத்தில் சங்க கட்டிடத்தை கட்டித்தருவதாக வாக்குறுதி தந்தால் போட்டியிலிருந்து நாங்கள் ஒதுங்க தயாராக இருக்கிறோம்.

ஒரே சங்கத்திலிருந்துகொண்டு சண்டையிட்டுக் கொள்வது முறையாக இருக்காது. எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்டவர்கள் கட்டிய கட்டிடத்தை இடித்துவிட்டு மல்டிப்ளக்ஸ் கட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே மல்டி பிளக்ஸ் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டினால் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறினார் விஷால்.

இதற்கு நடுவே ஜூலை 15 தேதி நடைபெறவிருந்த நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஜூலை 15 ம் தேதி புதன் கிழமை என்பதால் விடுமுறை நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனு அளித்துள்ளனர். அதற்கான தீர்ப்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close