Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரைவில் .... ரசிர்களுக்கு விஜய் , அஜித்தின் சிறப்பு விருந்து?

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் யூத் சென்சேஷனல் விஜய், அஜித் இருவரின் படம் குறித்த தகவலோ, அல்லது, டீஸரோ ஏன் புகைப்படம் வெளியானால் கூட ரசிர்கள் தரப்பில் விழா எடுக்காத குறையாக கொண்டாடிவிடுவார்கள். 

அப்படி ஒரு செய்தி காத்திருக்கிறது இன்று மாலை வரை காத்திருங்கள் என புலி படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி சௌத் மியூசிக் தனது ட்விட்டர் பக்கத்தில் “புலி அப்டேட்: உங்கள் காத்திருப்பு முடிவுக்கு வந்தாயிற்று. இயக்குநர் சிம்புதேவன்’ புலி படம் குறித்த சிறப்பு செய்தியை இன்று மாலை கொண்டு வர இருக்கிறார்’ என ட்வீட் செய்துள்ளனர். 

புலி படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. விசாரித்த போது மாலை வரை காத்திருங்களேன் எனக் படக்குழு சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். 

அதே போல் , சோனியின் இன்னொரு ட்வீட்டில் அஜித்தின் தலை, மற்றும் தாடியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 'பெரிய அறிவிப்பு என்னன்னு கெஸ் பண்ணுங்க?' என ட்வீட் செய்துள்ளனர். படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஒரு பாடல் வெளியிடும் எண்ணத்தில் அஜித் படக்குழு இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close