Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜமெளலியை ஆதரிக்கமுடியாது -- சர்ச்சை கிளப்பி வாங்கிக்கட்டும் நடிகர் சுரேஷ்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சுரேஷ். துணை, மஞ்சள் நிலா, கோழி கூவுது உள்ளிட்ட பல ஹிட் படங்களில் கதாநாயகனாக நடித்தவர். தற்பொழுது துணை நடிகராக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துவருகிறார். இவர் ராஜமெளலி பற்றியும் பாகுபலி படத்திற்கும் எதிராக கருத்து தெரிவித்ததால் ராஜமெளலி ரசிகர்கள் கடும் கோபத்தில் அவரை சமுக வலைதளத்தில் தாக்கி வருகின்றனர்.

சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ ராஜமெளலியையும், பாகுபலி படத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன். ஏனென்றால் தெலுங்கிலேயே ஜெகதீஸ் பாபு, சுமன் , சாய்குமார் உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் இருந்தும் அவர்களை பாகுபாலியில் நடிக்க வைக்க ராஜமெளலி யோசிக்கவில்லை” என்று ராஜமெளலியை கடுமையாகத் தாக்கியுள்ளார் நடிகர் சுரேஷ்.

தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் வரலாற்றுப் படம் பாகுபலி. மிகுந்த பொருட் செலவிலும் பெரும் எதிர்பார்ப்பிலும் வெளியாகவிருக்கும் பாகுபலி படத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர். இவர்களுக்குப் பதிலாக  தெலுங்கு நடிகர்களை நடிக்க வைக்கவில்லை என்பதுதான்  இவருடைய கருத்து எனவும் இதனால்தான் பிரச்னை எழுப்புகிறார் என்றும் வதால் ரசிகர்கள் கருதுவதால் சுரேஷ் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

ராஜமெளலியின் படத்தில் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் தான் முடிவெடுக்க வேண்டும். அதைப் பற்றி இவர் எப்படி பேசலாம் என்றும் தெலுங்கு நடிகரை நடிக்க வைக்கவில்லை என்று இவர் கூறுவதால் தமிழ் நடிகர்கள் நடிப்பதில் இவருக்கு என்ன பிரச்னை என்றும் இணையத்தில் பலர் கொந்தளிப்புடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close