Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியை முந்தினார் அஜித்.

செல்வாக்கு , புகழ் மற்றும் வருமானம் அடிப்படையில் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை தயார் செய்திருக்கிறது போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை.

சல்மான் கான் தான் இப்பட்டியலில் முதலிடம். இவர் சென்ற வருடம் 244 கோடி சம்பாதித்து புகழ், செல்வாக்கு மற்றும் அதிகப்படியான சம்பாத்தியம் அடிப்படையில் முதலிடத்திலிருக்கிறார். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அமிதாப் பச்சன் 197 கோடி சம்பாதித்துள்ளார். 202 கோடி சம்பாதித்து ஷாருக்கான் மூன்றாவது இடத்திலும், நான்காவது தோனி, ஐந்தாவது அக்‌ஷய்குமார், ஆறாவதாக கிரிக்கெட் வீரர் விராட் ஹோலி, ஏழாவதாக அமீர் கான் உள்ளனர். 

பிரபலங்கள் பற்றிய பட்டியலை தயாரித்த போர்ப்ஸ் பத்திரிகை 2013 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் வரை பிரபலங்கள் சம்பாதித்த பணம் மற்றும் செல்வாக்கு அடிப்படையில் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ரஜினிகாந்த், 37 கோடிரூபாய் சம்பாதித்து வருமானத்தில் 21வது இடத்திலும் புகழில் 89வது இடத்திலும் உள்ளார்.

விஜய் 41வது இடத்தில் உள்ளார். இவர் சென்ற வருடம் 33 கோடி சம்பாதித்து வருமானத்தில் 23வது இடத்திலும் செல்வாக்கில் 80வது இடத்திலும் இருக்கிறார். இதுபோல அஜித் 51வது இடத்தில் இருக்கிறார். ஆனாலும் சென்ற ஆண்டு 40 கோடி ரூபாய் சம்பாதித்து வருமானத்தில் 19வது இடத்திலும் செல்வாக்கில் 98வது இடத்திலும் இருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close