Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றி கமலுக்கா? அஜய்தேவ்கனுக்கா?

ஸ்டார் ஹீரோக்கள் நடிப்பில் ஒரே படம் இரண்டு மொழிகளில் ரீமேக்காகி அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் த்ரிஷ்யம்.

இப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக்காகி ஹிட் அடித்தது. தற்பொழுது  தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியாவதற்காக காத்திருக்கிறது.

தமிழில் கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் படம் தயாராகிவருகிறது. இசை ஜிப்ரான். மலையாளத்தில் இயக்கிய ஜூத்து ஜோசப்பே இப்படத்தையும் இயக்குகிறார். இதன் டிரெய்லர் வெளியாகி பெரிதும் ரசிகர்களிடையே பேசப்பட்டது. ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கீரது. 

இந்தியில் அஜய்தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் உருவாகிவரும் படம் த்ரிஷ்யம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தபு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். படம் ஜூலை 31ல் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு படங்களில் எது சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவிவருகிறது. அஜய்தேவ்கன் படம் சென்னையிலும் கமல்படம் மும்பையிலும் வெளியாகும் என்பதால் இரண்டு படங்களையும் பெரும்பாலோனோர் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.

இரண்டு படங்களிலும் கதை ஒன்றே. எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால். அதன் மேக்கிங்கே இரண்டு படத்திலும் எது ஹிட் அடிக்கும் என்பதைத் தீர்மானிக்கும். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் வெற்றி கமலுக்கா, அஜய்தேவ்கனுக்கா என்று!.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்