Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் பெருந்தன்மை.

ரஜினியின் பெயரில் படமெடுக்கும்போது அவரிடம் அனுமதி கேட்கவேண்டுமே, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் என்கிற பெயரை வைக்க ரஜினியிடம் அனுமதி கேட்டார்களா இல்லையா என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது. அதற்கு விளக்கம் சொல்வது போல. ரஜினிமுருகன் டீஸர் வெளியீட்டுவிழாவில் பேசினார் படத்துக்கு  படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமி. அவருடைய பேச்சின் ஒரு பகுதி....

'கும்கி' படத்தை 'மைனா' படம் வெற்றி பெறும் முன்பே ஒப்பந்தம் செய்து விட்டோம். விளம்பரம் பார்த்தே நம்பிக்கை வந்தது. இந்தபடத்தையும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வெளிவரும் முன்பே பேசி ஒப்பந்தம் செய்து விட்டோம். 

ரஜினி முருகன் படத்தின் கதை திரையரங்க மூடில் ஜாலியாக இருந்தது. வாழ்க்கையில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள். நீங்கள் இதே மனசோட இருங்கள் என்று  பொன்ராமைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.

'ரஜினி முருகன்' தலைப்பு பற்றி யோசித்தேன். ரஜினிகாந்த் என்று ரஜினி சார் பெயரில் தலைப்புக்கு அவர் அனுமதிக்க வில்லை. சிவாஜி என்கிற தலைப்புக்கு ஷங்கர்சார் சிவாஜி குடும்பத்தில் அனுமதி வாங்கினார். 'ரஜினி முருகன்' தலைப்பு சம்பந்தமாக ரஜினிசாரை நேரில் சந்திக்க வேண்டும்  என்று கேட்ட போது ரஜினி சார் போனில் வந்தார். நான் சொன்னேன் இந்த தலைப்பு பொன்ராமின் குரு ராஜேஷ் இயக்கிய 'ஒரு கல் ஒரு கண்ணாடி'  படத்தில் வரும் ஒரு பாத்திரம். 

எதிர்மறையாக எதுவும் பயன்படுத்த வில்லை என்று விரிவாகப் பேச ஆரம்பித்தேன் போதும் போதும் என்று என்னைப் பேசவே விடவில்லை. போனிலேயே ஓகே சொல்லி விட்டடார் .இது மிகப்பெரிய உதவி. அவருக்கு மிகப்பெரிய மனசு. அது மட்டுமல்ல ஏற்கெனவே தலைப்பு பற்றிய வழக்கு   ஏதோ இருக்கு. சௌந்தர்யா கிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக் குங்க என்றும் சொன்னார். 

எனக்காக இந்த தலைப்பை விட்டுக் கொடுத்த ரஜினிசாருக்கு பெரிய நன்றி என்று சொன்னார் லிங்குசாமி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close