Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரிப்புப் பேய், சோகப்பேய்களைத் தொடர்ந்து ஆக்‌ஷன்பேய் - தமிழ்சினிமா அட்டகாசம்

தமிழ் சினிமா ஹீரோக்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த பேய் பட ட்ரெண்ட். பேய்ப்படங்களின் வரிசையில் அடுத்ததாக ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் படம் “சவுக்கார் பேட்டை”.

ஆக்‌ஷன் கலந்த பேய்ப்படமாக உருவாகிவருகிறதாம் சவுகார் பேட்டை. சாதாரணமாக ஒரு படத்தில் ஹீரோ அல்லது ஹீரோயின் இருவரில் யாராவது ஒருவர் பேயாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இருவருமே பேயாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ராய்லட்சுமி கதாநாயகியாகவும், வடிவுக்கரசி, சரவணன், விவேக், அப்புகுட்டி, சம்பத், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட பலர் நடிப்பில் உருவாகிவருகிறது. ஸ்ரீகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டுவருகிறது சவுகார் பேட்டை.

படம் பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் பேசும்போது, “ கிளைமேக்ஸ் காட்சிக்காக மூலகொத்தலம் சுடுகாட்டில் ஸ்ரீகாந்த் - ராய்லட்சுமி இருவரும் ஐம்பது பேய்களுடன் படுபயங்கரமான மோதும் சண்டைக் காட்சிகள் படமாகவிருக்கிறது. பத்து நாட்கள் இந்த சண்டைக் காட்சிகளைப் படமாக்கவிருக்கிறோம்.  அடித்து நொறுக்கும் ஆக்‌ஷன் பேய் தான் இந்த சவுகார் பேட்டை.

ஆரம்பத்தில் பேய்கள் தன்னுடைய சோகத்தைச் சொல்லி அழும், காஞ்சனா போன்ற படங்களில் பேய் ரசிகர்களை சிரிக்க வைத்தது.  இப்போ அதிரடியா சண்டைப் போடவிருக்கிறது. இன்னும் என்னென்ன பேய்கூட்டம் தமிழ் சினிமாவில் உலாவபோகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close