Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் பிரகாஷ்ராஜ்!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்தே. அதைத் தொடர்ந்து ரஜினியின் படம் பற்றியான பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன.

ரஜினிபடத்தில் மெட்ராஸ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அட்டகத்தி, மெட்ராஸ் என்று ரஞ்சித்தின் இரண்டு படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து அனைவராலும் பேசப்பட்டவர்.

கலையரசனை தன்னுடைய அடுத்தப்படத்திலும் நடிக்க வைக்க வேண்டும் என்று என்று எண்ணத்தில் இருந்தாராம் ரஞ்சித். சமீபத்தில் ரஜினி நம்முடைய படத்திலும் கலையரசன் நடித்தால் நல்லா இருக்கும் என்று கேட்க சுலபமாக கலையரசனுக்கு ரஜினி படத்தில் முக்கிய வேடத்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

அதே போல அட்டகத்தி தினேஷும் ரஜினி படத்தில் நடிப்பதாக செல்லப்பட்டது.ரஞ்சித்தின் அட்டகத்தி, மெட்ராஸ் இரண்டு படங்களின் வெற்றிக்கு காரணமான இரண்டு ஹீரோக்களும் ரஜினியின் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ், கலையரசனைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜும் இப்படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தமிழில் பிரகாஷ்ராஜுக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது, இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் அதைச் சரி செய்துவிடலாம் என்று நினைத்து, கேட்டதும் அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. கேங்ஸ்டர் கதைக்களம் என்று சொல்லப்படும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் படப்பிடிப்புடன் தொடங்கவிருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close