Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் சொத்தை ஏமாற்றி அபகரித்துக்கொண்டார்- குடும்பநண்பர் மீது பிரபலநடிகர் மகள் புகார்.

பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவரின் மகளான லட்சுமி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அபகரித்த குடும்ப நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். 

“மறைந்த எனது தந்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன் எனக்கு கூடுவாஞ்சேரி அருகே  10 ஏக்கரில் நிலத்தை ஆறு வயதாக இருக்கும் போதே என் பெயரில் வாங்கி தந்துவிட்டார்.  அந்த நிலத்தில் 8 ஏக்கரை தந்தையின் குடும்ப நண்பருக்கு விலைபேசி விற்றேன்.

விற்றதில் மீதி இரண்டே முக்கால் கோடி ரூபாயை இன்னும் அவர் தரவில்லை. மேலும் 1.5 கோடிக்கு அவர் கொடுத்த காசோலையிலும் பணம் இல்லாமல்  திரும்பி விட்டது.  8 ஏக்கர் நிலத்திற்கான பணத்தை ஒழுங்காக தராமல் ஏமாற்றிவிட்டார். 

அதுமட்டுமில்லாமல் மீதியிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தையும், எனக்குத் தெரியாமல் எனது கையெழுத்தைப் பயன்படுத்தி பவர் பத்திரம் தயாரித்து  அபகரித்துவிட்டார். மேலும் இந்த 10 ஏக்கர் நிலத்தின் தாய் பத்திரத்தை அபகரித்து எனக்கு தெரியாமல் தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டரை கோடி கடனும் பெற்றுள்ளார். என்னை ஏமாற்றிய இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். என் நிலத்தையும் எனக்கு மீட்டுத் தரவேண்டும்” என்று குடும்பநண்பர் மீது லட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.

இலட்சுமியின் கணவர் ஜெகன் சொந்தமாக தொழில் செய்துவருகிறார். இரண்டு குழந்தைகளுடன் தேனாம் பேட்டையில் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தந்தையின் மறைவினால் துக்கத்தில் இருக்கும் இந்த வேளையில் குடும்ப நண்பரே ஏமாற்றிவிட்டதாக பெரும் துயரத்தில் இருப்பதாகவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் லட்சுமி.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close