Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணனாக அஜித், தங்கையாக லட்சுமி மேனன்...30% சென்டிமெண்ட் நிறைவு

 அஜித் , ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கபீர் சிங், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘தல 56’ படத்தை இயக்கி வருகிறார் ‘வீரம்’ சிவா. படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் தயாரிப்பு பணிகளை பார்த்துவருகிறார் ஏ.எம்.ரத்னம். 

துபாயில் இடம் தேர்வு செய்வதற்காக சென்ற தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ,அங்குள்ள ஒரு எஃப்.எம் ரேடியோவிற்கு கொடுத்த பேட்டியில் படத்தின் 30% படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. முக்கியமாக அஜித், லட்சுமி மேனனின் அண்ணன் , தங்கை சென்டிமெண்ட் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் என 30% படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. 

தற்போது சென்னையில் விருவிருப்பான சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் துபாயில் சில காட்சிகள் படமாக்கப்படவேண்டியுள்ளது. எனினும் அங்கு இப்போது அதீத வெப்பமான காலநிலை நிலவி வருவதால் வேறு இடத்தில் அல்லது அந்த காட்சிகளை மட்டும் இறுதியிலோ எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தீபாவளி சிறப்பாக வெளியாக உள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close