Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திப்படத்தை இயக்குகிறார் பிரகாஷ்ராஜ்!

2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சால்ட்அண்ட்பெப்பர் படத்தை, தமிழில் உன்சமையலறையில் என்கிற பெயரில் எடுத்தார் பிரகாஷ்ராஜ். சினேகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தைத் தயாரித்தது மட்டுமின்றி இயக்கியதும் பிரகாஷ்ராஜ்தான்.

அந்தப்படம் கடந்தஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அந்தப்படம் வந்துவிட்டது. இப்போது அடுத்தகட்டமாக இந்தியிலும் வங்காளத்திலும் அந்தப்படத்தை எடுக்கவிருக்கிறார்களாம். இவ்விரண்டு மொழிகளிலும் பிரகாஷ்ராஜே இயக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். அவர் இப்போது தமிழில் தயாராகும் நான்குபடங்களில் நடிக்கஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு நடுவே இந்தி மற்றும் வங்காளப்படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகளைச் செய்துவைத்துவிடுவார் என்று சொல்கிறார்கள். அந்தப்படங்கள் நிறைவடையும் நேரத்தில் உன்சமையலறையில் படவேலைகளைத் தொடங்கிவிடுவார் என்றும் சொல்கிறார்கள். அந்தமொழிகளில் படத்தைத் தயாரிக்க சிலர் முன்வந்திருப்பதாகவும் அவர்களுடன் அவர் பேசிக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தயாரிப்பைப் பொறுத்தவரை யாரும் ஒத்துவரவில்லையென்றால் அவரே தயாரிக்கவும் செய்வார். வெளியிடுகிற நேரத்தில் ஏதாவதொரு நிறுவனம் படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றும் சொல்கிறார்கள். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close