Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அர்ச்சனா, ரேவதி ஆகியோருக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த பிரகாஷ்ராஜ்.

வியாபார நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு தயாராகும் படங்களுக்கு மத்தியில் நல்லகதையம்சம் அதில் வியாபாரத்துக்கான விசயங்களைச் சேர்த்து அவ்வப்போது சில படங்கள் தயாராகும். அந்த வரிசையில் சேருகிற மாதிரி, பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, நாசர் ஆகியோர் சேர்ந்து நடிக்கும் புதியபடமொன்று தயாராகிக்கொண்டிருக்கிறது.

புதுஇயக்குநர் எம்.ஆர்.பாரதி இயக்கும் இந்தப்படத்தை அவரோடு சேர்ந்து அர்ச்சனாவும் ரேவதியும் தயாரித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டு மிகவும் பிடித்துப்போனதால், மற்றபடங்களைக் காட்டிலும் இதற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறாராம் பிரகாஷ்ராஜ். இந்தப்படத்தின் கதை மற்றும் விவரங்களைக் கேட்டுவிட்டு, எப்போது தேதி என்பதைப் பிறகு சொல்கிறேன் என்று அனுப்பிவைத்தாராம் பிரகாஷ்ராஜ்.

படக்குழுவினரும் அவர் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் வருவார் என்று நினைத்திருக்க, அவர்களே  எதிர்பாராதபடி உடனே தேதிகள் கொடுத்து இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இப்போது சென்னையில் அதன் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். ஓர் எழுத்தாளரின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்றும் இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ் அந்தப்புகழ்பெற்ற எழுத்தாளர் வேடத்தை ஏற்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது அர்ச்சனாவா? ரேவதியா? என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்துக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பெயர் வைக்கப்படவில்லை என்றாலும் 'கவிஞனாக்கினாள் என்னை' என்கிற பெயர் வைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்