Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளியாகும் முன்பே டிரெண்ட் ஆன புலி படத்தின் முன்னோட்டம்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் படம் புலி. அறிவிக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் தேதிக்கு முன்னரே அத்திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 20ம் தேதி இரவு 12 மணிக்கும், விஜய் பிறந்த நாள் அன்று, அதாவது  ஜூன் 21ம் தேதி இரவு 12 மணிக்கு புலி பட டீஸரும் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதனால் விஜய் ரசிகர்களால் ட்விட்டரில் ”புலி கவுண்டவுன் ஸ்டாட்ர்ஸ்” (#PuliCountDownSTARTS) என்று டீஸரை எதிர்பார்த்து புலியை ட்ரெண்ட் செட் செய்து வைத்திருக்கிறார்கள். 

இதற்கு நடுவே புலி பட கெட்டப்பில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் விஜய் படத்தையும் ஷேர் செய்து வருகின்றனர். இதற்கு முன்னரே விஜய் புலி பட புகைப்படங்கள் பற்றி பல செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்னரே புலி படத்தின் படங்கள் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் புலி படத்தின் டீஸரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதற்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வைத்திருப்பதே பெரும் சான்று.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close