Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்!

டார்லிங் படம் மூலம் ஹீரோவாக மாறிய ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து இசையமைப்பதோடு ஹீரோ பணியையும் சிறப்பாக செய்யத் துவங்கியுள்ளார். ஏற்கனவே இவரது நடிப்பில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடிக்கும் ‘பென்சில்’ படம் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் இருந்துவருகிறது.

தற்போது அடுத்தகட்டமாக இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநர்களாக பணிபுரிந்த ஷங்கர் மற்றும் , குணா ஆகியோரின் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு கதை வெற்றிமாறன்  வசனம் அட்லீ என்பதுதான் மிக சிறப்பான செய்தி. ஆக்ஸ்ட் மாதம் படப்பிடிப்புகள் துவங்கப்பட உள்ளன.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார். காதல் கதையான இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. படத்திற்கு இசையும் ஜி.வி.பிராகாஷ் குமார் தான். மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்துவருகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close