Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ரீபிரியாவை வருத்தப்பட வைத்த கமல்,

த்ரிஷ்யம் படத்தை தெலுங்கில் இயக்கியவர் ஸ்ரீபிரியா. வெங்கடேஷ், மீனா ஆகியோர் நடித்திருந்தார்கள். 2013 டிசம்பரில் மலையாளப்படம் வெளியானது. ஆறுகோடியில் தயாரிக்கப்பட்டு அறுபதுகோடி வசூல் செய்த அந்தப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்யும் உரிமைகளை வாங்கிய ஸ்ரீபிரியா, முதலில் தெலுங்கில்  தயாரித்ததோடு அவரே இயக்கவும் செய்தார்.

வெங்கடேஷ் போன்ற முன்னணிநடிகர் படத்தில் இருந்தும் நாற்பதுநாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டாராம் ஸ்ரீபிரியா. பெரியநடிகர் ஒருவரை வைத்து இவ்வளவு குறுகிய நாட்களில் ஒரு படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டதோடு இதைச் செய்துகாட்டிய ஸ்ரீபிரியாவையும் பாராட்டிக்கொண்டிருந்தனராம். இதெல்லாம் பாபநாசம் படம் எடுக்கும் வரையில்தான் நீடித்திருக்கிறது.

தமிழில் கமலை வைத்து எடுத்த மலையாளப்பட இயக்குநர் ஜித்துஜோசப், முப்பத்தியொன்பதுநாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டாராம். கமல் படம் ஒன்று இவ்வளவு வேகமாக படப்பிடிப்பு முடிந்தது அவருடைய திரைப்பயண வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். அப்படி ஒரு சாதனை நடந்தேவிட்டது.

தமிழிலும் இந்தப்படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவரான ஸ்ரீபிரியாவுக்கு ஒரு தயாரிப்பாளராக இது பெரிய சந்தோசத்தைக் கொடுத்தாலும் இயக்குநராகப் பொறாமையை ஏற்படுத்திவிட்டது. நான் நாற்பதுநாட்களில் படப்பிடிப்பை முடித்தேன், இவர்கள் முப்பத்தொன்பதுநாட்களில் படப்பிடிப்பை நிறைவுசெய்து என்னை முந்திவிட்டார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார் ஸ்ரீபிரியா.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close