Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலி டீஸர் திருட்டுத்தனமாக வெளியானது எப்படி?- புதியதகவல்கள்.

புலி படத்தின் டீஸரின் ஒரு பகுதி படக்குழுவினருக்குத் தெரியாமலே வெளியாகி விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமையைப் பரபரப்பாக்கிவிட்டது. இயக்குநர் பிரியதர்ஷனுடைய போர்பிரேம்ஸ் அரங்கத்தில்தான் புலி படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

அங்குள்ள இன்ஜினியர்கள் தவிர இன்டன்ஷிப்புக்காக கேரளாவைச் சேர்ந்த மிதுன் என்பவர் அங்கு இருந்திருக்கிறார். அவர் அங்கே பணியாற்றுகிறவர்களுக்கே தெரியாமல் செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுவிட்டாராம். விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடலாம் என்று வைத்திருந்த டீஸர் முந்தினநாளே வெளியானது கண்டு படக்குழவினர் அதிர்ச்சியாகிவிட்டனர், உடனே களத்தில் இறங்கிய இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் அந்நிறுவன மேலாளர் கல்யாணம் ஆகியோர், மிதுன்மூலம்தான் தப்பு நடந்தது என்பதைக் கண்டறிற்து உடனே காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டனர்.

உடனே அந்த இளைஞரைக் கைது செய்த காவல்துறை, இது வெறும் ஆர்வக்கோளாறு காரணமாக நடந்ததா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் பின்புலம் உள்ளதா? என்பது பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம். காவல்துறையில் புகார் கொடுத்த நிறுவன மேலாளர் கல்யாணத்திடம் இது பற்றிக்கேட்டபோது, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர்களுக்குத் தெரியாமலேயே இது நடந்துவிட்டது, சம்பந்தப்பட்ட மிதுன், கடந்த பதினைந்துநாட்களாக இங்கு இன்டன்ஷிப்பில் இருந்தார்.

கேரளஇசையமைப்பாளர் முரளிதரன் என்பரின் மகன்தான் இவர். நல்லெண்ண அடிப்படையில் அவரைச் சேர்த்திருந்தோம். இதுபோல் நடந்துவிட்டது, இந்தவிசயம் பற்றிக் கேள்விப்பட்ட எல்லோருமே, உங்கள் நிறுவனத்திலா இப்படி நடந்தது? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவுக்குத்தான் எங்களுடைய பணி இருந்தது, அதையும் மீறி இப்படி நடந்துவிட்டது.

இப்போது எங்கள் ஸ்டுடியோவின் பாதுகாப்பைப் பன்மடங்கு அதிகரித்துவிட்டோம், இன்டன்ஷிப் மாணவர்களுக்கு அனுமதிகொடுப்பதில்லை என்றும் முடிவுசெய்திருக்கிறோம். இனிமேல் ஸ்டுடியோவுக்குள் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது மட்டுமின்றி ஸ்டுடியோவுக்குள் ஜாமர் செட் பண்ணிவிட்டோம் என்றும் சொன்னார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close