Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நஸ்ரியாவைப் பற்றி நான் சொன்னதாகப் பொய்ச்செய்தி - ராகவா லாரன்ஸ் கோபம்.

ராகவாலாரன்ஸின் பெயரைப் பயன்படுத்தி சமுக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்புவதாகவும், அப்படி வருகிற எந்தச் செய்தியையும் நம்பாதீர்கள் என்றும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“எனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எது எதில் எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள் என்று இயக்குனரும் நடிகருமான ராகவாலாரன்ஸ் கூறி உள்ளார். மேலும் அடுத்து எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்திகள் பரப்பப்பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப் பட்டு பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்க ஒரு செயல் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

 மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ராகவா லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close