Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயப்பிரதா மகன் படவிழா, கமல், ரஜினி கலந்துகொள்வார்களா?

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியமொழிகள் மட்டுமின்றி இந்தி மற்றும் வங்காளப்படங்களிலும் நடித்தவர் ஜெயப்பிரதா. அரசியல்வாதியாகவும் இருக்கிறார். அவருடைய மகன் சித்துவைக் கதாநாயகனாக வைத்து உயிரேஉயிரே என்றொரு படத்தைத் தயாரித்திருக்கிறார்.

விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் எழுதி இயக்கியிருக்கும் அந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா ஜூன் 27 அன்று நடைபெறவிருக்கிறது. அந்நிகழ்ச்சியில், இந்திநடிகர் அனில்கபூர், தெலுங்குநடிகர் மோகன்பாபு, கன்னடநடிகர் அம்பரிஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் கலந்துகொள்ளப்போகிறார்களாம்.

 மற்ற மொழிகளிலிருந்து சீனியர்நடிகர்கள் கலந்துகொள்ள தமிழிலிருந்து மட்டும் ஆர்யா கலந்துகொள்வதாகச் சொல்லப்பட்டது. தமிழில் அவர் கமல், ரஜினி மற்றும் விஜயகாந்த் ஆகியோர் படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக கமலின் தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார்.

அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் கமல் அல்லது ரஜினி கலந்துகொண்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே? என்று படக்குழுவினரிடம் கேட்டால், இங்கு கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் விழாவில் அவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close