Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவாளரானார் நீரவ்ஷா,

இந்திப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து தன் பயணத்தைத் தொடங்கிய ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இன்றுவரை முன்னணிஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் அவர், விஜய்யின் போக்கிரி, அஜீத்தின் பில்லா ஆகிய படங்கள் உட்பட பல முன்னணிநடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான கேமிராமேன் என்று சொல்லப்படுகிற அளவு அவருடைய எல்லாப்படங்களுக்கும் (கிரீடம், பொய் சொல்லப்போறோம் படம் தவிர) நீரவ்ஷாதான் ஒளிப்பதிவு. அவர் இப்போது தமிழில் தயாராகும் மிகப்பெரிய படமான எந்திரன்2 க்கு ஒளிப்பதிவாளராகியிருக்கிறாராம்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் அந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்து கடைசியில் நீரவ்ஷாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நீரவ்ஷாவைப் பொறுத்தவரை அவர் படத்தின் பட்ஜெட்டுக்கேற்ப சம்பளம் வாங்கிக்கொள்பவர்.

அவர் தூம்2 படத்திலும் வேலைசெய்வார், சைவம் படத்திலும் பணியாற்றுவார். அப்படிப்பட்ட அவருக்கு இந்தப்படத்தில் மிகப்பெரிய சம்பளம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்காக அவருக்கு இரண்டரைகோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நீரவ்ஷா பணியாற்றும் படங்களில் நாயகர்களைக் கூடுதல் அழகாகக் காட்டுவார் இந்தப்படத்தில் ரஜினியும் மேலும் அழகாகத் தெரிவார் என்று நம்பலாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close