Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருள்நிதிக்கு வந்த சோதனை!

அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்“நாலுபோலீஸும் நல்லா இருந்த ஊரும்”. ஸ்ரீகிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகும் என்று அருள்நிதி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இதே நேரத்தில் கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் ஜூத்து ஜோசப் இயக்கி வெளியாகவிருக்கும் படம் பாபநாசம். இப்படம் இன்று சென்சார் பார்வைக்கு சென்று எந்த வித காட்சி நீக்கமும் இல்லாமல் க்ளீன் யூ சான்றிதழ் பெற்றிருக்கிறது. சென்சார் சான்றிதழ் பெற்ற கையோடு இப்படத்தையும் ஜூலை 3ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே மலையாளத்தில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கே பாபநாசம் என்பதால் நிச்சயம் இதன் எதிர்பார்ப்பு தமிழில் கூடியிருக்கிறது. அதே நேரத்தில் முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கும்  அருள்நிதியின் நாலுபோலீஸூம் நல்லா இருந்த ஊரும் படமும் அதே நாளில் வெளியாகிறது. 

எந்த போட்டியும் இன்றி தனியாக வெளியாகும் என்ற எண்ணத்தில் இருந்த அருள்நிதியின் படம் வெளியாகும் அதே நாளில் பாபநாசம் வெளியாகும் என்று அறிவித்திருப்பதால் தனியாக வந்து நிச்சயவெற்றியோடு நல்ல வசூலையும் பெற்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அருள்நிதி படக்குழு  பாபநாசம் ரிலீஸ் அறிவிப்பால் தடுமாறியிருக்கும் என்பதில் மாற்றமில்லை.  

எடிட்டர் சாய்ஸ்

[X] Close