Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கும் பி.சி.ஸ்ரீராம்?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ரஜினிமுருகன். இப்படம் விரைவில் வெளியாவதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. 

இயக்குநர் அட்லியிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்தப்படம் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

இதுவரை வெளியான படங்களை விட இப்படம் அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கிறது.  பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஹீரோவாகா இருக்கும் சிவகார்த்திகேயனை நம்பி படத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டிபோட்டு பேசிவருவதாக சொல்லப்படுகிறது.

ஷங்கரின் ஐ படத்தில் பணிபுரிந்த நியூசிலாந்தை சேர்ந்த மேக்கப் மேன் உள்ளிட்ட பலர் இப்படத்திலும் பணிபுரியவிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close