Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னைக்கு அருகில் கமல் படப்பிடிப்பு!

கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. ராஜேஷ்எம்செல்வா என்பவர் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடருவதாகச் சொல்லப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள தனியார் திரைப்படநகரத்தில் அதன்படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். முதலில் பொழுதுபோக்குப் பூங்காவாக இருந்த அந்தஇடம் இப்போது திரைப்படநகரமாக மாற்றப்பட்டிருக்கிறதாம். அங்கு பல அரங்குகள் அமைத்து திரைப்படப்படப்பிடிப்புக்கு விட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அதிலுள்ள குளிரூட்டப்பட்ட ஓர் அரங்கில் தூங்காவனம் படத்துக்காக செட் அமைக்கும் பணிகள் கடந்த பலநாட்களாக நடந்துகொண்டிருக்கிறதாம்.

 ஒரு நவீனஹோட்டல் மற்றும் இரவுவிடுதிகள் போல் செட் போட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அங்கு படப்பிடிப்பு நடத்தினால் பெரும்பகுதிப்படம் நிறைவாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அந்தசெட்டைப் பார்க்கும்போது, ஓர் பிரஞ்சு படத்தைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்படுகிறது என்கிற வதந்திக்கு உயிர்கொடுத்த மாதிரி இருக்கிறதாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close