Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரவில் டப்பிங் பேசும் ஜெய்!

மணிமாறன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் புகழ் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் சிலநாட்கள் படப்பிடிப்பு மட்டும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இதற்கிடையே படப்பிடிப்பு முடிந்தவரைக்கும் டப்பிங் வேலைகளை முடித்துவைத்துவிடலாம் என்று படக்குழு திட்டமிட்ட நேரத்தில் ஜெய், இன்னொரு படத்தின் படப்பிடிப்புக்காகப் போய்விட்டாராம். இதனால் அவர் மட்டும் டப்பிங் பேசவேண்டியிருந்ததாம். அவர் இப்போது டப்பிங் பேச வந்திருக்கிறாராம். ஆனால் பகல் நேரத்தில் வரஇயலாது இரவில்தான் வருவேன் என்று சொல்லிவிட்டாராம். அதனால் ஒவ்வொருநாளும் இரவில் அவர் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறாராம்.

அதற்குக் காரணம், இப்போது ரம்ஜான் மாதம் என்பதுதானாம். அவர் இஸ்லாமியராக மாறிவிட்டதால், பகல் முழுக்க தொழுகைகளைச் சரியாகச் செய்யவேண்டும் என்பதற்காக அப்போது எந்தவேலையையும் வைத்துக்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள்.

இதனால் அவர் இரவில் வருகிறார். அவர் வருகிற நேரத்தில் இயக்குநர் குழுவும் இருந்தாகவேண்டுமே, பகல் முழுக்க சும்மா இருந்துவிட்டு இரவில் வேலை செய்யவேண்டியிருக்கிறதே என்று புலம்பக்கூட முடியாமல் வேலை நல்லபடியாக நடந்தால் சரி என்று எல்லோரும் வேலை செய்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close