Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாள் சண்டை கற்றுக்கொண்ட விஜய்!

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, மற்றும் சுதீப் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். கடந்த ஜூன் 21ம் தேதி மதியம் 2மணிக்கு வெளியிடப்பட்ட ‘புலி’ படத்தின் டீஸர் மட்டும் மூன்று நாட்களில் முப்பது லட்சங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

ஜூன் 20ம் தேதி வெளியான ’புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்திய அளவில் அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக முந்தைய பாலிவுட் ‘பிகே’ படத்தின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் படத்தில் விஜய் போராளியாக நடிப்பது நாமறிந்ததே. 

இந்த படத்தின் போராளி பாத்திரத்திற்காக விஜய் பிரத்யேகமாக வாள் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டாராம். திலிப் சுப்பராயனும், சீனா சண்டை பயிற்சியாளர் சாங் லீயும் விஜய்க்கு வாள் சண்டை பயிற்சி கொடுத்துள்ளனர். ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என படத்தில் அனைவருக்கும் சரிசமமான கதாபாத்திரமாம். 

கண்டிப்பாக காண்போரை கவரும் வண்ணம் கண்களுக்கு விருந்தாக பிரம்மாண்ட காட்சிகள் படத்தில் இருப்பதாக சிம்புதேவன் தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close