Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லட்சுமி மேனனின் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

பள்ளிப்படிப்பு முடித்துவிட்டு கல்லூரியில் அடியெடுத்துவைத்துவிட்டார் லட்சுமிமேனன். பள்ளியில் படிக்கும் போதே தமிழ் சினிமாவின் நட்சத்திரமான மாறியவர் இவர்.

கேரளாவின் பிரபலமான தூய இருதயக் கல்லூரியில் தகவல் தொடர்பியல் பிரிவில் சேர்ந்து படிக்க தொடங்கிவிட்டார் லட்சுமிமேனன். முதல்நாள் கல்லூரிக்கு ஆட்டோவில் சாதாரணமாக சென்றிருக்கிறார். சக மாணவர்கள் இவரை ஆச்சரியத்துடனே பார்த்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எல்லாம் பழகிவிடும் என்கிறார் லட்சுமி மேனன்.

இவர் சமுக வலைதளத்தில் கூறியதாவது, “ என்னுடைய கல்லூரி வாழ்க்கை ஆரம்பமாகும் இந்த நாளுக்காக நான் காத்திருந்தேன். மேலும் இந்த கல்லூரியில் படிப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். என்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்காக காத்திருக்கிறேன்” என்கிறார். இக்கல்லூரி இவரின் சினிமா நடிப்புக்காக சில சலுகைகளும் வழங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் லட்சுமிமேனன் அஜித்தின் தங்கையாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close