Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரம்மாண்டமாக துவங்கியது விஜய் 59!

ராஜாராணி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கும் புதியபடத்தின் தொடக்க விழா ஜூன்26 ஆம் தேதியான இன்று நடைபெற்றுவருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதம் துவங்குகிறது.

சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையிலுள்ள கேரளாஹவுஸ் என்கிற படப்பிடிப்புத்தளத்தில் இந்தப்படத்தின் தொடக்கவிழா நடைபெற்றுவருகிறது. படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் படத்தையும் கலைப்புலி தாணு தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும் சூப்பர் ஸ்டார் கலந்துகொள்ளவில்லை. விஜய், பிரபு, கலைப்புலி தாணு, மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் வருகை தந்துள்ளனர். 

இதற்குமுன்பு அட்லி இயக்கத்தில் ‘ ராஜா ராணி’ படத்துவக்கவிழாவில் கமல் ஹாசன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.குடும்பம் சார்ந்த கதையாகவும் மேலும் இதில் விஜய் போலீஸாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விஜய்யின் 59வது படமான இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். 

படத்துவக்கவிழாவை முன்னிட்டு, செய்திகள், புகைப்படங்கள் என ட்விட்டரில் #vijay59 என ட்ரெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close