Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காக்கா முட்டை’ படத்தின் மீது வழக்கு...தனுஷ் ஆஜராக கோர்ட் உத்தரவு!

மணிகண்டன் இயக்கத்தில் சென்னையின் சேரி வாழ் பசங்களை மையமாக வைத்து ஜூன் 5ம் தேதி வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘காக்கா முட்டை’. படம் வெளியானது முதல் அனைத்து மக்களிடமும் பாராட்டுகளை பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

'காக்கா முட்டை' படத்தில் வழக்கறிஞர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் உள்பட 4 பேர் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் மணிவண்ணன் என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், 'காக்கா முட்டை' படத்தில் வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி முருகன், படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் மணிகண்டன் மற்றும் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஆகஸ்ட் 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close