Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருகிறது மீண்டும் வா அருகில் வா

 1991ம் ஆண்டு ராஜா, ரம்யா கிருஷ்ணன், வைஷ்ணவி நடிப்பில் வெளியான ஹாரர் படம் 'வா அருகில் வா’. படத்தின் நாயகன் ராஜாவிற்கு முதல் மனைவியாக வரும் வைஷ்ணவியை குடும்பமே சதி செய்து கொன்று விட அவரது ஆவி வீட்டில் இருக்கும் ஒரு பொம்மைக்குள் நுழைந்துவிடும். அந்த பொம்மை நடத்தும் பழி தீர்க்கும் படலமே பழைய ‘வா அருகில் வா’.

தற்போது இப்படத்தின் அடுத்த பாகமாக ‘மீண்டும் வா அருகில் வா’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஹீரோவாக ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகன் பிரதாப் நடிக்கிறார். தமிழில் நாயகியாக மனீஷா ஸ்ரீயும், இந்தியில் நாயகியாக சாரா ஷெட்டியும் நடிக்கிறார்கள். 

இந்தி தமிழ் என இரு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தில் இரண்டிலுமே நாயகன் பிரதாப் தான். படத்தை இயக்குகிறார் ஜெயராஜேந்திர சோழன். இசை ஜெஷ்வந்த் மற்றும் விவேக்.   

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close