Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷை குறிவைக்கிறதா வாலு டிரெய்லர்?

என் ஃபேன்ஸோட சந்தோசம் தான் ஃபர்ஸ்டு! மத்ததெல்லாம் நெக்ஸ்டு! நீங்க இல்லாம நான் இல்லை. அப்டினு ட்விஸ்டை ட்விட்டரில் ட்விட் செய்துவிட்டு பின்னாடியே வாலு டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.

வாலு டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே ட்விட்டரில்  ட்ரெண்டானார் சிம்பு.  அதுமட்டுமில்லாமல் டிரெய்லரில் வரும் வசனங்கள் தனுஷை குறிவைக்கிறதா என்று சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் மாரி டிரெய்லரில் தனுஷ் , “ நானெல்லாம் தர லோக்கல் என்று வசனங்களை பேசியிருப்பார். அதுபோல வாலு டிரெய்லரில் சிம்பு,  “ நானெல்லாம் எக்ஸ்ட்ரீம் லோக்கல் சார்” என்று சொல்கிறார்.  தனுஷை குறிவைத்தே பதில் வசனங்களை உருவாக்கியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டுவருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், குரைக்கிற நாய் தான் கல்லடி வாங்கும், பதுங்குற புலி தான் ஆள அடிக்கும், சொல்லிவை, அவன்கிட்ட,  தேவையில்லாம என் வழியில குறுக்க வாரான், மவனே கண்டமாயிடுவான்.  என்று தெறி பறக்கும் வசனங்களை பேசியிருக்கிறார். இந்த வசனங்களை ட்விட்டரில் தனுஷை மையப்படுத்தி ட்விட் செய்துவருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.

“எப்படியிருந்தாலும் வாலு , மாரி இரண்டு படமுமே ஜூலை 17ம் தேதி வெளியாகிறது. அப்போ தெரிந்துவிடும் யாரு தர லோக்கல்? யாரு எக்ஸ்ட்ரீம் லோக்கல்னு ” என்று ரசிகர்களின் கமெண்டுகள் வந்துவிழுகிறது ட்விட்டரில்...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close