Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டும் முக்கியம், மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை!

ஒரு காரியத்தை தொடங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவதுதான் பெரிய விஷயம். அப்பாவிடம் நாங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் என்று தந்தை சிவகுமாரை பாராட்டினார் சூர்யா.

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம்  பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருடமும் பரிசளித்து வருகிறார். படிப்பில் சிறந்த மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக  தனது 100-வது படம் வெளியான போது, சிவகுமார் இந்த  அறக்கட்டளையை தொடங்கினார். 

இந்த ஆண்டுக்கான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா வழங்கினார்.

நிகழ்ச்சியில் சூர்யா பேசும் போது, “ ஆரம்பிக்கும் போது பல முறை யோசிப்பார். ஆரம்பித்துவிட்டால் அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக விடாமல் உழைப்பார். 36 வருஷமாக நடக்கும் இந்த நிகழ்ச்சியே பெரிய உதாரணம். முழு மனதோட உழைப்பது பற்றி என் தந்தையிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்ட பாடம். 

‘அகரம் ஃபவுண்டேஷன்’ நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1300 பேராக உயர்கிறது. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம்.

தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இங்கு வந்திருக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் அப்பா சொன்ன கல்வி, ஒழுக்கம் இவை இரண்டையும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்” என்று பேசி முடித்தார் சூர்யா.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close